தற்போதைய செய்திகள்

காதல் ஜோடி பிரச்சனை: ஆம்பூரில் 3-வது நாளாக தொடரும் போராட்டம்

ஆம்பூர் அருகே சின்ன வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த இருவேறு சமுதாயத்தை சேர்ந்த இளவரசி - விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே காதல் ஜோடி பிரச்சனை காரணமாக ஆம்பூரில் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமையும் போராட்டம் நடைபெற்றது.

ஆம்பூர் அருகே சின்ன வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த இருவேறு சமுதாயத்தை சேர்ந்த இளவரசி - விக்னேஷ் ஆகிய இருவரும் காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறினர்.  இதுகுறித்து மகளை காணவில்லையென இளவரசியின் தந்தை பன்னீர்செல்வம் உமர்ஆபாத் போலீஸில் புகார் செய்தார்.  இதுகுறித்து விக்னேஷின் நண்பர்களிடம் கேட்டதற்கு அவர்கள் பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகளையும் கடத்தி விடுவதாக மிரட்டியுள்ளனர்.

தன்னுடைய மகள் வேறு சமுதாயத்தை சேர்ந்தவருடன் காதலித்து வீட்டைவிட்டு வெளியேறியதாலும்,  காதலனின் நண்பர்கள் மிரட்டியதாலும் மனமுடைந்த பன்னீர்செல்வம் பூச்சி மருந்து குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.  அப்போது ஆம்பூர் டிஎஸ்பி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கை. பாலராமன் ஆகிய இருவரையும் முற்றுகையிட்டு அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

தலைமறைவான காதல் ஜோடியை போலீஸôர் கண்டுபிடித்து ஆம்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தினர்.   இளவரசி தான் மேஜர் என்பதால் காதலருடன் தான் செல்வேன் என நீதிபதியிடம் கூறியதால் போலீஸாரின் பாதுகாப்புடன் செல்ல நீதிபதி ஆனந்தராஜ் உத்தரவிட்டார்.   

விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்யும் வரை பன்னீர்செல்வத்தின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.  தந்தையின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளவரசியின் சகோதரர் பாபு அரசு மருத்துவமனை வளாகத்தில் தன்னுடைய உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீóககுளிக்க முயற்சித்தார்.   போலீஸôர் மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.  போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.  மாலை 6.30 மணி வரை தீர்வு எட்டப்படாததால் அவருடைய உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியறினார்கள்.

விக்னேஷை கைது செய்யாத வரையில் பன்னீர்செல்வத்தின் உடலை வாங்க மாட்டோம் என  3-வது நாளாக வியாழக்கிழமையும் தொடர்ந்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.  போலீஸôர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் வியாழக்கிழமை மாலை 3 மணி வரை தீர்வு எட்டப்படவில்லை.  வெங்கடசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இறந்தவரின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. விக்னேஷையும் கைது செய்ய வேண்டுமென்பதில் பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் உறுதியாக இருந்தனர்.   தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருப்பதால் ஆம்பூர் அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.  மருத்துவமனை வளாகம் மற்றும் சின்னவெங்கடசமுத்திரம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT